Free TNPSC Group IV online mock test every Day -03/12/2023 | குரூப்- 4 பணிக்கு கல்வித் தகுதி விதிகளில் திருத்தம் தேவை?


Subscribe to YouTube channel for
Study Material👇


Cup of motivation from a succeeded VAO 


குரூப்- 4 பணிக்கு கல்வித் தகுதி விதிகளில் திருத்தம் தேவை

மதுரை : குரூப்-4 பணிக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித் தகுதியை நிர்ணயித்து விதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 135 சமையல்காரர்கள் பணி நியமனத்திற்காக தேர்வு அறிவிப்பு 2020 ல் வெளியானது. விண்ணப்பதாரர்கள் தமிழ் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

வயது 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் பட்டியலினம் (எஸ்.சி.,) மற்றும் பழங்குடியினத்தை (எஸ்.டி.,) சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தகுதியானவர்கள் திருச்சி மாவட்டத்திலுள்ள எஸ்.சி.,-எஸ்.டி., மாணவர் விடுதிகளில் சமையல்காரர்களாக 2021 ஜன.,22ல் நியமிக்கப்பட்டனர்.

விசாரணைக்கு பின் 2022 டிச.,16 ல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து சிலர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

தனி நீதிபதி,'அதிக தகுதி பெற்றுள்ளனர் எனக்கூறி நியமனத்தை ரத்து செய்தது செல்லாது,' என உத்தரவிட்டார்.இதை எதிர்த்து ஆதிதிராவிடர் நலத்துறை கமிஷனர், திருச்சி கலெக்டர் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.கலைமதி அமர்வு விசாரித்தது.

அரசு தரப்பு: சமையல்காரர் பணிக்கு சிறப்பு விதிகளின் கீழ் எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பத்தாம் வகுப்பு தோல்விதான் கல்வித் தகுதி. தேர்வாகி, நியமனம் செய்யப்பட்டவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல் உயர்கல்வியை தகுதியாக கொண்டவர்கள். இவர்கள் சமையல்காரர் பணி நியமனம் பெற தகுதியற்றவர்கள். இவர்களை நியமிப்பதால் எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவை சேர்ந்த தகுதியானவர்களுக்கு வாய்ப்பு பறிபோகும். வயது முதிர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

விதிகள்படி பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு 30. எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு 35 வயது தகுதியாக இருக்க வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தரப்பு: விளக்கமளிக்க வாய்ப்பளிக்கவில்லை. பணி நீக்க உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதிகள்: குரூப் -4 பணியில் அதிக தகுதியுடையவர்களை நியமிக்கும் தற்போதைய நிலை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

சமத்துவமின்மையை நீக்கி, சமநிலையை ஏற்படுத்த குரூப் -4 பணிக்கான தேர்வு, நியமனத்திற்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்க வேண்டியது அவசியம். கூடுதல் தகுதியுள்ள நபர்கள் சிறிய சாதாரண வேலைகளுக்கு தகுதியற்றவர்கள் என இந்நீதிமன்றம் கருதவில்லை. தேர்வுக்கான கல்வித் தகுதியை பரிந்துரைப்பது வேலை வழங்குபவரின் தனிச்சிறப்பு.

இருப்பினும் பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு வழங்குவது அரசியலமைப்பு சட்டப்படி அவசியமானது.

சிறிய சாதாரண பணியில் அதிக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை நியமித்தால், பொது நிர்வாகத்தில் செயல்திறன் குறையக்கூடும். குரூப்- 4 பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ள அதிகப்படியான தகுதியுடையவர்களிடமிருந்து முழுமையாக வேலைவாங்க முடியாத தற்போதைய சூழ்நிலை பாடம் கற்பிக்கிறது. உயர்நீதிமன்ற நிர்வாகமும் கூட இத்தகைய சிக்கல்களை எதிர்கொள்கிறது.

சமீபகால வேலைவாய்ப்புகளில் முதுகலை, தொழிற்கல்வி பட்டங்கள் பெற்றவர்கள் சிறிய பணிகளில் அதிகளவில் உள்ளனர். தனி நீதிபதியின் உத்தரவு மாற்றியமைக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக தகுதியுடைவர்களை சமையல்காரர் பணியில் சேர அனுமதிக்க வேண்டும்.

அடிப்படை பணிக்கான சிறப்பு விதிகளை மீறி அதிக வயதுடையவர்களை தேர்வு, நியமனம் செய்தது சட்டவிரோதம். குரூப்-4 பணிக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித் தகுதியை நிர்ணயித்து விதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.

Comments

Popular posts from this blog

Free TNPSC Group IV online mock test every Day -06/12/2023 | இலவச TNPSC குரூப் IV ஆன்லைன் மாதிரித் தேர்வு ஒவ்வொரு நாளும் -06/12/2023

Free TNPSC Group IV online mock test every Day -07/12/2023 | இலவச TNPSC குரூப் IV ஆன்லைன் மாதிரித் தேர்வு ஒவ்வொரு நாளும் -07/12/2023