Loading… Subscribe to YouTube channel for Study Material👇 ▶ புது முயற்சி Cup of motivation from a succeeded VAO குரூப்- 4 பணிக்கு கல்வித் தகுதி விதிகளில் திருத்தம் தேவை மதுரை : குரூப்-4 பணிக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித் தகுதியை நிர்ணயித்து விதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 135 சமையல்காரர்கள் பணி நியமனத்திற்காக தேர்வு அறிவிப்பு 2020 ல் வெளியானது. விண்ணப்பதாரர்கள் தமிழ் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும். வயது 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் பட்டியலினம் (எஸ்.சி.,) மற்றும் பழங்குடியினத்தை (எஸ்.டி.,) சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தகுதியானவர்கள் திருச்சி மாவட்டத்திலுள்ள எஸ்.சி.,-எஸ்.டி., மாணவர் விடுதிகளில் சமையல்காரர்களாக 2021 ஜன.,22ல் நியமிக்கப்பட்டனர். விசாரணைக்கு பின் 2022 டிச.,16 ல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து சிலர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். தனி நீதிபதி,'அதிக தகுதி பெற்றுள்...